www.eelabarathi.com, info@eelabarathi.com.

தலைப்பு செய்திகள்

விடுதலைப் புலிகள் நடத்தியது தற்காப்புத் தாக்குதலே: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம்

"சிறிலங்கா அரசாங்கமே திருகோணமலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. அதற்கெதிராக தற்காப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படார்கள். அதுவே மோதல்கள் தீவிரமடைவதற்குக் காரணமாகியது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கின்றார்.

"யுத்த நிறுத்தத்தில் தமக்குள்ள பற்றுறுதியை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்த வேண்டும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருப்பதற்கு பதிலளிக்கையிலேயே சு.ப.தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

"மாவிலாறில் ஏற்பட்ட உள்ளுர்ப் பிரச்சினையை சமாதானமாகத் தீர்க்கக்கூடியதாகவிருந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் வேண்டுமென்றே வலிந்த தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுத்தது என்பதற்கு நோர்வேயின் அனுசரணையாளர்களும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் சாட்சிகளாகவுள்ளார்கள்" எனவும் சு.ப.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டிருக்கின்றார்.

"எம்முடைய கட்டுப்பாட்டிலுள்ள மூதூர் கிழக்குப் பகுதிக்குள் பெருமளவு ஆயுத பலத்துடன் பாரியளவிலான தாக்குதல் நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற தன்னுடைய நீண்டகால இரகசியத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது" எனக் குற்றஞ்சாட்டியுள்ள சு.ப.தமிழ்ச்செல்வன், "நீர்ப் பிரச்சினை உருவாகுவதற்கு முன்னதாகவே குறிப்பிடத்தக்க காலப்பகுதியில் இந்தப் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்கள் இதற்கு ஆதாரமாகும்" எனவும் சுட்டிக்காட்டினார்.

"இதற்கு மேலாக, நீர் விநியோகத்தைத் திறந்து விடுவதுதான் தன்னுடைய தாக்குதல் நடவடிக்கையின் நோக்கம் என சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்த போதிலும், நீர் விநியோகம் திறந்துவிடப்பட்ட பின்னரும் தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகின்றது" எனவும் அவர் தெரிவித்தார்.

"தன்னுடைய இராணுவ வலிந்த தாக்குதலின் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கம் பரந்த நோக்கங்களைக் கொண்டுள்ளது என்பது இந்த நடவடிக்கையின் மூலமாக உறுதியாகின்றது" எனவும் சு.ப.தமிழ்ச்செல்வன் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

"திருமலைக் கடற்படைத் தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் தன்னுடைய தாக்குதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியபோது, அவர்களது ஆட்டிலறி தாக்குதல்களையும், முன்னோக்கிய படை நகர்வையும் தடுப்பதற்காக அவர்களது தாக்குதல் நிலைகளின் மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நாம் உள்ளானோம்" எனவும் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

"சிறிலங்கா இராணுவமே தன்னுடைய தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதுடன், மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் விடுதலைப் புலிகளின் மீது தாக்குதலை நடத்தியது" எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

"யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில், எழுதுமட்டுவாள், கிளாலி, நாகர்கோவில் மற்றும் முகமாலை பகுதிகளில் ஓகஸ்ட் 11 ஆம் திகதி முழுவதும் பாரிய ஆயுதங்கள் மற்றும் படையினரின் நகர்வுகள் அவதானிக்கப்பட்டது. இராணுவத்தைப் பலப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு உதவும் முகமாக பொதுமக்களுடைய நடமாட்டங்களும் வரையறுக்கப்பட்டது. அன்றைய தினம், வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு வடபகுதி காவல் நிலைகளைத் தாண்டி எமது பகுதியை நோக்கி பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்தது. இது போர் நிறுத்தத்தை பாரியளவில் மீறும் ஒரு நடவடிக்கையாகும். இருந்தபோதிலும், சிறிலங்கா இராணுவத்தின் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பாக அறிந்திருந்த எமது போராளிகள் அதனைத் தோற்கடித்துள்ளார்கள்" எனவும் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

நன்றி>புதினம்.

தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு இலங்கை அரசின் மறுப்பறிக்கை

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டது தொடர்பில், இலங்கை இராணுவத்தை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட கண்டனத்தீர்மானத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை மறுப்பறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் ஊகங்களின் அடிப்படையில் திரித்து கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இலங்கை அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூதரகத்தின் சார்பில் தமிழ் நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒருபக்க அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டசபை தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விடுதலை புலிகளால் அநாதை காப்பகம் என்று கூறப்பட்டுள்ள இடம் உண்மையில் இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக ஆட்களை சேர்த்து பயிற்சி அளிக்கும் விடுதலைப் புலிகளின் முகாம் என்றும், இவற்றைப்பற்றிய ஒளிநாடா இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர சமூகத்துடனும் பத்திரிகையாளர்களுடனும் ஆகஸ்ட்

16 ஆம் தேதி பகிர்ந்துகொண்டும் வெளியிடப்பட்டும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் குறைந்த வயதுடைய போராளிகளை பலவந்த ஆட்சேகரிப்பு மூலம் பயிற்சியளிப்பது பலகாலமாக நடைபெறுவதாகவும், அந்த அடிப்படையில் இராணுவ விமான தாக்குதலின்போது விடுதலைப்புலிகளால் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட நபர்களும் இருந்திருக்கலாம் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளதாகவும் இலங்கை அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு இழப்பு உட்பட இச்சண்டையின் மூலம் ஏற்பட்டுள்ள சகல மனித இழப்புகளுக்கும் இலங்கை அரசு தனது முழுமையான கவலையை தெரிவிப்பதாகவும், விடுதலைப்புலிகளின் உந்துதலினால்தான் அரசாங்கம்

தற்காப்புக்காகவே ஒரு வகை நிர்ப்பந்தத்தினால் நடத்திய தாக்குதலில் தான் இந்த மனித இழப்பு நேர்ந்தது என்பதை வலியுறுத்துவதாகவும் இலங்கை அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தமது கொடூர செயல்களால் ஏற்படும் மனித துயரங்களை தமக்கு சாதகமாக விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் விடுதலைப்புலிகள் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்துவர் என்பதில் ஐயமில்லை என்றும் இலங்கை அரசின் அறிக்கை கூறுகிறது.

நன்றி>பிபிசி

http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml

யாழில் பட்டினிச்சாவு அவலத்துக்கு முகம் கொடுக்கப் போகும் 5 இலட்சம் தமிழர்கள்.

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலால் தமிழ் மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மனிதக்கேடயங்களாக குடியிருப்புக்களுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் ஐந்து லட்சம் குடாநாட்டு மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

களமுனை தகவல்கள் ஒரு வித மர்மம் நிறைந்த பீதியை கிளப்பிக்கொண்டிருக்க மறுமுனையில் ஊரடங்கு உத்தரவு நேரங்களில் நடைபெறும் அப்பாவி பொதுமக்களின் படுகொலைகள் இரத்தத்தை உறைய வைக்க- இன்னொரு புறம் அங்கு பட்டினி நிலை தலைதூக்கலாம் என்ற அபாய அறிவிப்பானது அசரீரியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் தற்போது நான்கு மணித்தியாலங்கள் வரை தளர்த்தப்பட்டது.

வலிகாமம், தீவகம் பகுதிகளில் முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணிவரையிலும்

வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரையிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.

இந்த நேரத்தில் வீதிக்கு வந்த பொதுமக்கள் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்;களை வாங்கிகொண்டு மீண்டும் தமது வீடுகளை நோக்கி விரைகின்றனர் மக்கள். அந்த மூன்று மணித்தியாலங்களில் பிரதான வீதிகளில் பயங்கர மக்கள் நெருக்கடி.

அச்சமயம் அனைத்து வீதிகளிலும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வெளியில் வரும் மக்கள் அவதானிக்கப்படுகின்றனர். சிறையில் கண்காணிக்கப்படுவது போல் நடத்தப்படுகின்றனர்.

ஊரடங்குச் சட்டத்தால் குடாநாட்டில் சகல தொழில் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. குறிப்பாகக் கிராமப் புறங்களில் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் ஏழைத் தொழிலாளர்கள் சுமார் ஒரு வாரமாகத் தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களும், அவர்களது குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடற்கரையோரங்களை அண்டி வாழும் கடற்றொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்வதில்லை. அவர்களது குடும்பங்களும் பெரிதும் துன்பங்களை அனுபவிக்கின்றன.

குடாநாட்டின் பல இடங்களிலும் விவசாயப் பயிர்ச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அமுலில் இருப்பதால் விவசாயிகள் எவரும் தமது வயல்களுக்கு செல்ல வாய்ப்புக் குறைந்துள்ளது. நீர் பாய்ச்சவும் எவருமில்லை. மரக்கறிப் பயிர்கள் என்பன நீரின்றிக் கருகி வருகின்றன.

தோட்டங்கள் எங்கும் பயிர்கள் வாடிப் போய்க் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக அன்றாட உணவுத் தேவைகளுக்கே மரக்கறி வகைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துகளும் முற்றாகத் தடைப்பட்டிருப்பதால் அவசர நோயாளர்களைக் கூட மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

இது இவ்வாறிருக்க பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளிலும் விசமிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து பதுக்கல்- அபரிமிதமான விலை உயர்வு என்பவற்றைத் தவிர்த்து உணவுப்பொருள்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகம் செய்யுமாறு யாழ். அரச அதிபர் க.கணேஸ் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரியுள்ளார்.

இது விடயமாக பல.நோ.கூ.சங்கங்கள் மற்றும் அனைத்து தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் யாழ். அரச அதிபர் க.கணேஸ் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குடாநாட்டிலுள்ள பிரதேச செயலர்கள், உதவி அரச அதிபர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் இது தொடர்பாக அரச அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பல துன்பங்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நேர்மையுடனும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னின்று உழைக்கவேண்டும் என்றும் கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை சீரான முறையிலும், நீதியான விலையிலும் விற்பனை செய்வதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் ப.நோ.கூட்டுறவுச் சங்க நிர்வாகத்துக்குப் பொறுப்பான அனைவரும் தமது விற்பனை நிலையங்களை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் இயங்குவதனை உறுதிப்படுத்துமாறும அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை குடாநாட்டில் வணிகர்களிடம் ஒருவாரத்துக்குப் போதுமான உணவுப் பொருட்களே கைவசம் உள்ளதாக என்று யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.

யாழ். அரச அதிபர் கே.கணேஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம், நல்லூர், அனலைதீவு ப.நோ.கூ.சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் "கொழும்பில் இருந்து பொருட்;கள் ஏற்றிவந்த 60 லொறிகள் முகமாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன" என்றும் "அவற்றை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவர ஏற்பாடு செய்யும்";படியும் கோரிக்கை விடுத்தனர்.

அரிசி, மா, சீனி ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதுடன் குடாநாட்டுக்கான மின்சாரம் தொடர்ந்து தடைப்பட்டுள்ள இந்நிலையில் எரிபொருட்களும் தற்போது முற்றாக தீர்ந்து வருவதாக களஞ்சிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேங்காய் ஒன்றின் விலை 50 ருபாவிலிருந்து 250 ருபாவுக்கு உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ பச்சை மிளகாய் 50 ருபாவுக்கு விற்கப்படுகிறது.

குடாநாட்டுக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் கிட்டத்தட்ட முற்றாகவே செயலிழந்த நிலையாகவே காணப்படுகிறது.

செல்லிடப்பேசி மற்றும் வயர்லெஸ் தொலைபேசி சேவைகள் முற்றாக செயலிழந்துள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறிலங்கா ரெலிக்கொம் தனது சேவையை வழங்கி வருகிறது.

இதனால் வீடுகளில் தொலைபேசி வசதி உடையவர்கள் சிலர் இதனையே சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான அழைப்புக்களை வெளி இடங்களுக்கு மேற்கொள்ளக்கூடிய தொலைபேசி வசதி கொண்டவர்கள் வெளி அழைப்புக்களுக்கு 10 ருபாவும் உள்வரும் அழைப்புக்களுக்கு 8 ருபாவும் அறவிட்டு தமது "இடைக்கால தொழிலாக" அதை "செழிப்புறச்செய்வதில்" தீவிரமாக உள்ளனர் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, யாழ். மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதற்கான வசதிகள் தற்போது இல்லை என்று யாழ். மாவட்ட அரச அதிபர் க.கணேஸ் அறிவித்துள்ளார்.

முகமாலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தொடங்கிய மோதலோடு வடக்கிற்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதால், ஏற்கனவே தமது தேவைகளுக்காக வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரிதும் இடர்படுகின்றனர்.

குறிப்பாக வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும், அங்கிருந்து வவுனியா, கொழும்பு போன்ற இடங்களுக்கும் தொழில் நிமித்தமாகவும், மருத்துவத் தேவைகள் மற்றும் வேறு விடயங்களுக்காகவும் சென்றவர்கள் திடீரெனப் பாதைகள் பூட்டப்பட்டதால் தத்தமது பகுதிகளுக்குத் திரும்ப முடியாமல் அங்கலாய்க்கின்றனர்.

தமது கைக்குழந்தைகளைத் தனியாக விட்டு வந்த தாய்மார்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் சொந்த இடம் திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வடக்கே மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்கள் செய்வதறியாது அங்கும் இங்குமாக அவதிப்பட்டு நிற்கின்றனர்.

வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலிருந்து ஓமந்தையூடாக வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்களில் சுமார் 500 பேர் தமது இடங்களுக்குத் திரும்ப அவசரமாக அனுமதி பெற்றுத் தரும்படி வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் விண்ணப்பித்திருக்கின்றனர் என்று வவுனியா செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஓமந்தை ஊடான போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் அனுமதிக்குமாறு வவுனியா அரச அதிபர் படை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

எனினும், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்க முடியும் என்று படைத்தரப்பு தெரிவித்து விட்டதாகவும் வவுனியா செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியூடாகப் புலிகளின் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

அரச அலுவலர்கள் தமது உத்தியோக அடையாள அட்டையை சோதனைச் சாவடியில் படையினரிடம் காண்பித்து தம்மை உறுதிப்படுத்திய பின்னர் சாவடியூடாக வன்னிப் பகுதிக்குள் செல்லமுடியும் என்று மாவட்ட அரச அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

எனினும் புலிகள் பகுதிக்குள்ளிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இப்போதைக்கு கண்டி வீதியை திறப்பதற்கும் ஊரடங்கை முற்றாக நீக்குவதற்கும் படையினர் கடைசிவரை சம்மதிக்க மாட்டார்கள். அப்படி செய்தால் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்றுவிடுவர். அதன் பிறகு குடாநாட்டை கைப்பற்றுவது புலிகளுக்கு சுலபமாகிவிடும் என்ற அச்சம் படையினருக்கு உள்ளுர உண்டு.

ஐந்து லட்சம் மக்களும் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கிடுக்குப்பிடியில் நாளாந்தம் செத்து-செத்து வாழ்வதுதான் விதி என்று அங்குள்ள மக்கள் தொலைபேசியில் கண்ணீர் மல்குகின்றனர்.

நன்றி>புதினம்

தமிழின துரோகிகளை இனம்கானுவது எப்படி?

தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களை இனம் கானுவது எப்படி எனபதை உலகத்தமிழர் அறிந்துகொள்வதற்காக வரயப்படும் வரைவு இது.

 

ஈழத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும், பலர் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். குறிப்பாக புலிகளுக்கு எதிராக பேசுகிறார்கள் எழுதிகிறார்கள். ஆனால் எதிர்ப்பவர்கள் எலோரும் சொல்லும் கருத்து, மக்கள் கொலைகள் செய்யப்படுவதை கண்டிக்கிறார்கள், அல்லது கண்டிப்பது போல் நடிக்கிறார்கள். இதனால் பல உலகத்தமிழர்கள் கருத்து மயக்கம்கொள்கிறார்கள். அவர்களது தீர்மானதிற்காக இது விடப்படுகிறது.

 

முல்லைத்தீவு செஞ்சோலையில் நடைபெற்ற சிங்களரானுவத்தின், விமானகுண்டுவீச்சுக்கு பலியான மாணவிகள், UNHCR, போர்நிறுத்த கண்கானிப்பு குழுவினர் சென்று, கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டபின்னரும், அந்த இறந்து போன அப்பாவி மாணவர்களை வைத்து இவர்கள் செய்யும் அரசியலும், செய்தி மயக்கத்தையும் நீங்களே பிரித்து அறிந்து கொள்ளலாம்.

 

ஒளிவடிவில் பார்க்க இங்கே செல்லவும்.

http://www.eelatamil.com/sensolai/

புகைப்படங்களாக பார்க்க இங்கே செல்லவும். 

http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=8&Itemid=1

http://www.eelampage.com/?cn=28175

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள்தான் என UNHCR, போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர்நிரூபித்த நிருபனங்கள்.

http://www.eelampage.com/?cn=28187

 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19228

http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=28&Itemid=1

இச்சம்பவங்களை தமிழர் என கூறிக்கொண்டு அவ் அப்பாவிமாணவர்களை வைத்து செய்திரிப்பவர்களின் திரிபுகளும், பொதுமக்களுக்காக தற்காப்பு பயிற்ச்சி கொடுக்கப்பட்ட புகப்படங்களை, இறந்த மாணவர்களின் படங்களுடன் கலந்து, அவர்கள் ராணுவ பயிற்சிக்குதான் வந்தார்கள் என நிறுவ முயற்சிக்கப்படும் முயற்சி.

 

திரிபுகளைபார்க்க இங்கே செல்லவும்

தேனீ

http://www.thenee.com/html/mullai-17.html

இலக்கு

http://ilakku.com/?p=549

விழிப்பு

http://vizhippu.net/node/4290

அதிரடி

http://athirady.com/?p=1852

நிதர்சனம்.நெற்

http://nitharsanam.net/?p=1354

நெருப்பு

http://www.neruppu.com/

http://www.hindu.com/2006/08/16/stories/2006081613520100.htm

இவர்கள், ராணுவ பயிற்சிக்கு என வலுகட்டாயமாக கொண்டுவரப்பட்டதாக கூறியவர்களுக்காக இன்று தமிழ்நாட்டு சட்டசபையில், இரங்கலும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

 

கண்டனத்தை பார்க்க இங்கே செல்லவும்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml

 

இந்தியாவால் தடை செய்யப்பட்ட அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கு, தமிழ்நாட்டு சட்டசபையில் இரங்கலும்,கண்டனமும் செய்யமுடியுமா? மத்திய அரசின் நிலைதான் எனது நிலை என கூறும் தமிழக முதல்வர் இதை அனுமதிப்பாரா? அல்லது இந்திய சட்டம்தான் இதை அனுமதிக்குமா?

எட்டபனும், காக்கைவன்னியனும் தமிழர்கள்தான், ஆனால் அவர்கள் இனம்கானப்பட்டார்கள்.

எனவே வாசகர்களே, தமிழினத்தின் துரோகிகள் யாரென்று இனம்கானுவதை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

சமச்சீரற்ற போர் நிறுத்தம் நாலாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம்.

போர் நிறுத்தம் பேணப்படும் ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை அவ் வப்போது மேற்கொள்ளப்படும். இதுதான் சிங்கள அரசின் போர்நிறுத்தத்திற்கு உரிய புதியவரை விலக்கணம். இந்த மட்டுப்படுத்தப்பட்ட படை நட வடிக்கை கடலில் ஆரம்பித்து வானில் தாவி இப்போது தரையில் இராணுவ நகர்வையும் நில ஆக்கிரமிப்பையும் மேற்கொள்ளும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒரு தரப்பினால் நடை முறைப்படுத்தப்படும் போது போர்நிறுத்தம் சமச்சீரற்றதாகின்றது. இருதரப்பும் பின்பற்றுமாக இருந்தால் அது முழுமையான போராகும்.

போர் முதலில் களத்தில் உருவாவ தில்லை. அதை ஏற்படுத்துபவர்களின் மனதிலேயே உருவாகின்றது. பின்பு அது போர்க்களத் தில் பரிணமிக்கின்றது. அப்படித்தான் அரசின் அடிமனதில் உள்ள போர்வெறி நிழல் போராகி மட்டுப்படுத்தப்பட்டதாக்குதலாகி தற்போது ஒருமுழு அளவிலான போர்வரை விரிவடைந்துள் ளது.

சிங்கள அரசின் இப்படிப்பட்ட போர்ச்சிந்தனையே பேசித்தீர்க்க வேண்டிய தண்ணீர் பிரச்சினையைக்கூட இராணுவவழி மூலம் தீர்க்க முனைந்துள்ள அதன் படை நடவடிக்கை காட் டுகிறது.

அரசின் மட்டுப்படுத்தப்பட்ட படை ந டவடிக்கையின் உச்சக்கட்டமாகக் கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற விமானத் தாக்குதல்களையும் இராணுவ நகர்வையும் கருதலாம். இ தற்கு அரசு கூறும் காரணம் மாவிலாறு நீர்ப்பிர ச்சினை. அது ஒரு இராணுவ பிரச்சினை கிடையாது. பொது (சிவில்) பிரச்சினை. அதை இரா ணுவ வழிகளில் தீர்க்க முற்பட்டுள்ளது அரசு.

அதுவும் போர்நிறுத்தமும் சமாதான முயற்சிகளும் சர்வதேச கண்காணிப்பில் நடை பெறும் காலத்தில் அதற்காக விமானம் மூலம் தாக்கப்பட்ட இடங்கள் தான் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனையும் ஆழ்ந்து சிந்திக்க வைத்துள் ளது. திருமலை மாவிலாறு, மட்டக்களப்பு விடு தலைப் புலிகளின் அரசியல் மற்றும் வெளியு றவு தொடர்பகமான தேனகம், முல்லைத்தீவு இவை தான் விமான குண்டுவீச்சிற்கு இலக்கா கியவை.

அரசு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவ டிக்கை என்ற போர்வையில் மூன்று இலக்குக ளை அடைய முற்பட்டுள்ளது. ஒன்று மாவிலாறு பிரதேசத்தை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றி அரச கட்டுப்பாட்டுப் பகுதியாக்குதல். இதன் மூலம் அரசு இராணுவச் சமநிலையில் மேலோங்கி இருப்பதாகத் தென்பகுதியில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், Nஐ.வி.பி., ஹெ ல உறுமய போன்ற கட்சிகளை அடக்கி வை க்கவும் முடியும்.

இரண்டாவது இலக்கு மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு. ஒட்டுக்குழுக்களின் பெயரில் அரசு மேற்கொண்ட பிரதேசவாத பிரிவினைப் போரையும் கிழக்கு மாகாணம் தொடர்பாக அரசு மேற்கொண்ட பொ ய்ப்பிரச்சாரத்தையும் முறியடித்ததில் பெரும் பங்கு பானுவிற்கு உண்டு.

1990-களின் முற்பகுதியில் நடை பெ ற்ற இரண்டாம் கட்ட ஈழப்போரில் வடக்கில் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் ஆணிவேரை அசைக்க நினைத்தது சிங்கள அரசு. ஆனால் குறிப்பிட்ட போராளிகளுடன் கிழக்கு மாகாணம் சென்று பல அதிரடித் தாக்குதல்களின் மூலம் ஒரு சில மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட இராணுவத் தினரைவீழ்த்தி இராணுவ நடவடிக்கைக்குப் படை யினரின் செறிவை ஒன்று குவிக்கவிடாது தடுத்த பெருமை பானுவிற்கு உண்டு.

அதன் பின் பானுவின் நெறிப்படுத்த லில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஏராளம். இவை தவிர சிங்கள இராணுவத்திற்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி படைப்பிரிவும் கேணல் பானு தலை மையிலேயே இயங்கி வந்தது. எனவேதான் புலனாய்வுத்துறை மற்றும் ஒட்டுக் குழுக்கள் மூலம் தகவல்களைத் திரட்டி தேனகம் மீது கேணல் பானுவை குறிவைத்து தாக்கு தலை நடத்தியிருந்தது சிங்கள அரசு.

மூன்றாவது இலக்கு முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதை உள்ள இடம் என்று அரசினால் சந்தேகிக்கப்பட்ட பகுதி.

விடுதலைப் புலிகளிடம் விமானம் உள்ளதும், விமான ஓடுபாதை உள்ளதும் அரசி ற்கு இரண்டு பாதிப்புக்களை கொடுத்திருந்தது. விமானம் மூலம் தாக்குதலையோ அல்லது நகர்வுகளையோ விடுதலைப் புலிகள் மேற்கொ ள்ளலாம் என்பது ஒருபுறம்.

விடுதலைப் புலிகளிடம் பலமான கடற்படை உண்டு என்பதும் அதை தோற்கடிக்க சிங்கள அரசால் முடியாது என்பதும் உலகறிந்த உண்மை. தற்போது விமானப்படையும் உள்ளது என்பதுடன் அதன் வளர்ச்சியையும் உலகு ஏற்று கொண்டு விட்டால் ஒரு முழு அளவிலான தேச த்திற்குரிய கட்டமைப்புக்களை விடுதலைப் புலி கள் பெற்று விடுவார்கள் என்பதுமாகும்.

எனவே தான் மாவிலாறு நீர்ப்பிரச்சி னையை கொண்டு தனது திட்டங்களை நிறை வேற்ற முனைந்திருந்தது அரசு. ஆனால் விடுத லைப் புலிகள் இதற்குக் கொடுத்த பதிலடி தா ன் அரசு சற்றும் எதிர்பார்க்காதவை. மிகவும் இலகுவாக இராணுவத்தின் மாவிலாறு பகுதி நோக்கிய பெருமெடுப்பிலான நகர்வை விடுத லைப் புலிகள் முறியடித்ததுடன் பலத்த இழப்பு க்களையும் ஏற்படுத்தி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆவணி முத லாம் நாள் அதிரடித்தாக்குதல் மூலம் சிங்கள அரசின் கிழக்கு மாகாண கடற்படை தலைமை யகத்தை செயலிழக்கச் செய்திருந்தனர்.

மூன்றாம் ஈழப்போர் தான் திருமலை துறைமுகம் மீதான தாக்குதலின் ஆரம்பம். இதன் பின்பு ஐந்திற்கு மேற்பட்ட தடவைகள் திருமலை துறைமுகமும் அதனை சூழ உள்ள பகுதிகளும் தாக்குத லுக்கு உள்ளாகி இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை கடற்படைக்கலங்கள் மீதானவை. இரண்டு தாக்குதல்களே கடற்படை தலைமையகத்தைமையமாக வைத்து மேற்கொள் ளப்பட்ட தாக்குதல்கள்.

1999 ஐப்பசி மாதம் 23 ஆம் நாள் கடற்படைத்தளத்தில் இருந்த பீரங்கி கப்பல்கள் மீதும் தளத்தின் மீதும் ஒரேசமயத்தில் தாக்கு தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டதுடன் 5 கி.மீ தூர வீச்சுக்கொண்ட 81 மீ.மீ எறிகணைகள் மூலம் தளத்திற்கும் கடும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

உதவிக்கு விரைந்த ஆஐ-24 ரக தாக் குதல் உலங்கு வானூர்தியும் ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டிருந்தது. 81 மீ.மீ மோட்டரின் குறுகிய தூரவீச்சு காரணமாக மோட்டார் தாக்குதல்கள் கடற்கரை பகுதிக்கு ஊடுருவிய விடுதலைப் புலிகளின் விசேட படையணியால் நடத்தப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய தாக்குதல்கள் அரசிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தாக் குதல்கள்.

ஏனெனில் புலிகள் பயன்படுத்தியது 20 கி.மீ தூரவீச்சு கொண்ட 122 மீ.மீ ஆட்டிலறிகள். கேணல் கிட்டு ஆட்டிலறி படையணி துறைமுகத்தின் எதிர்ப்புறம் உள்ள சம்பூரில் உள்ளத மது நிலைகளில் இருந்தே கடற்படை தளத்தை துவசம் செய்திருந்தன.

இதில் அரசிற்கு அதிர்ச்சி தரும் விட யங்கள் பல. விடுதலைப் புலிகள் எவ்வாறு கனரக பீரங்கிகளை திருமலைக்கு நகர்த்தி னார்கள்? இந்தப் பீரங்கிகளின் தூரவீச்சிற்குள் அகப்பட்டுள்ள துறைமுகத்தை எப்படி காப்பா ற்றப் போகிறோம்? திருமலை துறைமுகம் அற்ற நிலையில் தனது இராணுவ இயந்திரத்தின் இய ங்குதன்மை என்ன? என்பவை தான்.

அரசு இந்தப் அதிர்ச்சியில் இருந்து மீளமுன் விடுதலைப் புலிகளின் படையணிகள் திருமலை துறைமுகம் அமைந்துள்ள கொட் டியாரக்குடாவின் முக்கியத்துவம் வாய்ந்த கிழ க்குப் பகுதியான மூதூரின் இறங்குதுறை, மூதூர் நகரம், கட்டைப்பறிச்சான், தோப்பூர் பகுதிகளை அதிரடித்தாக்குதல்கள் மூலம் கைப்பற்றியிருந் தார்கள். தற்போது திருமலை துறைமுகத்தின் முழுப்பகுதியும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் எல்லைக்குள் வந்துள்ளதுடன் கொட்டியா ரக்குடாவின் மேற்குக்கரையான சீனன்குடாவின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.

Pனன்குடா படைத்தளம் சிறிய விமா னப்படை தளத்தையும் கொண்ட கூட்டுப்படை தளமாகும். இது முக்கியமாக திருமலை தள த்தின் பாதுகாப்பிற்கு ஆதரவான பின்தளப் பகு தியாகும். தற்போது திருமலை தளமும் அதன் பின்தளமும் செயலிழந்து போகும் நிலையில் உள்ளன. ஆனால் இத்தளங்களின் இழப்பு கிழ க்கை மட்டுமல்ல வடக்கின் யாழ். குடாவில் உள்ள 40,000 படையினருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும். அவர்களின் இருப்பை உறுதிசெ ய்யும் வழங்கல் பாதையும் அதன் பின்தளமும் திருமலை கடற்படைத்தளம் தான். எனவே தி ருமலை தளத்தின் அழிவு ஒரு தொடர் அழிவை ஏற்படுத்தும் என்பது உண்மை.

திருமலை கடற்படைத்தளம் வீழ்ந்தா ல் யாழ். குடா வீழ்ச்சி அடையும். யாழ். குடா வீழ்ந்தால் சிங்கள அரசின் போரிடும் வலு முற்றாக அழிந்து போகும். போரிடும் வலு இழக்கப்படும் போது வடக்கோ கிழக்கோ எங்கும் சிங்கள அர சின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும். அதாவது திருமலையை சிங்களப்படை இழந்தால் போரை இழந்ததிற்கு சமன். தற்போது என்ன விலையை கொடுத்தாவது மூதூரை மீட்டுவிட வேண்டும் என்று சிங்களப்படை கடும் முயற்சி எடுத்துள்ளது. அதன் ஓரங்கமாகவே கடந்த வியாழன் இரா ணுவத்தின் விசேட படையணியை கொட்டியாரக் குடாகடலினுடாக படகுகள் மூலம் தரையிறங்கி மூதூரின் இறங்கு துறையை கைப்பற்ற முனை ந்திருந்தது.

ஆனால் அதை எதிர்பார்த்து தயார்நி லையில் இருந்த புலிகள் தாக்குதலை முறியடி த்ததுடன் படையினருக்குப் பேரிழப்பையும் ஏற் படுத்தி உள்ளனர். தரையிறங்கு கலம் மூழ் கடிக்கப்பட்டதுடன், கொல்லப்பட்ட படையினரின் 40 சடலங்களும் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 2004 இல் கருணாவின் துரோகத்தை அரசு தனது இராணுவ நலன்களுக்குப் பயன்படுத்த எண்ணி அதற்கான பின்புலங்களை உருவாக்கிய போது. நிழல் போரின் மூலம் ஒரு போரை தமிழ் மக்கள் மீது அரசு திணிக்கப் போகிறது என்பது தேசியத்தலைவரால் மிக துல்லியமாகக் கணிக்கப்பட்டிருந்தது. ஆகவே புலிகளின் முன்னணித் தளபதிகளான கேணல் சொர்ணம், கேணல் பானு ஆகியோர் முக்கிய கேந்திர மையங்களான திருமலைக்கும், மட்டக்க ளப்பிற்கும் முன்கூட்டியே நகர்த்தப்பட்டிருந்தனர். அத்துடன் மக்கள் படையணியும் உருவாக்கப்பட் டது. அன்றைய தலைவரின் நுட்பமான படைநக ர்த்தல் தான் இன்றைய சிங்கள அரசின் தோல்வி.

தமது அரசியல் நலன்களுக்காகவே பெருமளவு படுகொலைகளையும், சமர்களையும் தமிழ் மக்கள் மீது ஒவ்வொரு சிங்கள அரசுகளும் கட்டவிழ்த்து விட்டிருந்தன. ஆனால் இனி மேல் சிங்கள அரச தலைவர்களின் நலன்களு க்காகத் தமிழ் மக்கள் மீது போர் தொடுத்தால் அது எதிர்மறையான விளைவுகளையே தரும் என்பது தான் மூதூர், திருமலை தாக்குதல்கள் மூலம் சிங்கள அரசிற்கு புரியும்படி தற்போது சொல்லப்படுகிறது. ஒரு தாக்குதலானது அது நிகழ்த்தப்படும் வேகத்திலோ அல்லது ஏற்படுத்தப் படும் சேதத்திலோ மட்டுமல்லாது, நடத்தப்படும் இடம், காலம் ஆகியவற்றை பொறுத்தும் மிக முக்கிய திருப்பத்தை போரில் ஏற்படுத்தக்கூடியது.

எனவே சிங்கள அரசின் வலிந்த போருக்கான விடுதலைப் புலிகளின் தற்போதைய பதிலடி கேந்திர முக்கியத்துவமான இடத்தில் சரியான நேரத்தில் தொடுக்கப்பட்ட பதிலடியாகும். இது அரசினால் மேற்கொள்ளப்படும் நிழல் போரி லும் அதன் அடுத்த பரிணாமமான நிஜப்போரிலும் பாரிய மாற்றத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத் தப்போகின்றது.

நன்றி

மட்டு ஈழநாதம்

தேர்ந்தெடுத்த இலக்குகளை தாக்கியழித்த புலிகள் பழைய நிலைகளுக்கு திரும்பினர்.

திருமலையில் கடந்த 26 நாள் தொடக்கம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி சிறீலங்காப் படையினர் விமானத்தாக்குதல், எறிகணைத் தாக்குதலை கண்மூடித்தனமாக நடத்தினர்.

இதனையடுத்து மாவிலாறு அணைக்கட்டை சிறீலங்கா படையினர் கைப்பற்றும் நோக்குடன் முன்னெடுத்த படைநகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அழி்க்க அதாவது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள பின்தளமாக இருந்த படைமுகாம்கள் தாக்கியழிக்கும் படைநகர்வை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில் மூதூர் பிரதேசத்திலும், சேருநுவரப் பிரதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை தாக்கியழித்த விடுதலைப் புலிகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட படைநகர்வை நிறைவு செய்துகொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலான வரையறுக்கப்பட்ட பழைய நிலைகளுக்கு நேற்றிரவு திரும்பியுள்ளனர்.

தற்பொழுது ஏற்பட்டு மனிதாபிமான அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் தாக்கியழிக்கப் பட்டதையடுத்தும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் முற்றுமுழுதாக நிறுத்தி பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இப்படை நடவடிக்கையில் சிறீலங்கா அரச படையினர் தரப்பில் 100 மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் 30 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் பழை நிலைகளுக்குச் சென்றபின்னர் அவ்விடத்திற்கு சென்ற சிறீலங்காப் படையினர் உயிரிழந்திருந்த படையினரின் சடலங்களை அடக்கும் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற்துறைப் பேராளி புரட்சி எம்மிடம் தெரிவித்துள்ளார்.

-புதினம்-


நாளை காலை மூதூரை விட்டு 30 ஆயிரம் பொது மக்களும் வெளியேறப்போவதாக முஸ்லீம் காங்கரஸ் அரசுக்கு எச்சரித்துள்ளது.

 

மூதூரில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலினாலேயே பொது மக்கள் பலர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளதாக முஸ்லீம் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மூதூர் உலமாக்கள் சபைப் பிரதிநிதிகளும், பொது மக்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கல்லாறு இராணுவ முகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலினாலேயே முஸ்லீம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதையடுத்து இன்று இரவு அவசரமாக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய குழு, இது குறித்து ஆராய்ந்துள்ளது.இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவில்,ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் இன்று இரவுக்குள் தமது எறிகணைத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் மூதூரில் உள்ள 30 ஆயிரம் பொது மக்களும் நாளை காலை அங்கிருந்து வெளியேறி கந்தாளாயில் தஞ்சமடையப் போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசீல் ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எனினும் இது குறித்த முக்கியமான முடிவு நாளை காலை வெளியாகாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு : newstamilnet.com

Thursday, 03 Aug 2006 USA


 அரபுக் கல்லூரி மீது சிறிலங்காப் படையினர் ஆட்லறி தாக்குதல்: 10 முஸ்லிம்கள் பலி

 

மூதூர் அரபுக்கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் அங்கிருந்த பத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் நடந்தது.

மூதூர் பகுதியில் நேற்று முன்தினம் சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்பதாயிரம் முஸ்லிம் மக்கள் மூதூர் அரபுக்கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்வாறு செறிந்திருந்த மக்கள் மீது வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணைகளால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மக்களின் சரியான விவரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை, மூதூர் இறங்குதுறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் சமர் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-புதினம்-


மூதூர் மீட்கப்படுகிறது. 

    தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள சிங்கள இராணுவத்தின கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டு சிங்கள இராணுவத்தினர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காந்திநகர், பலாத்தோப்பு, தோப்பூர், செல்வநகர் ஆகிய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர்.

தற்போது மகிந்தபுரம் பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரில் சிங்கள விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன.

மேலும் மாவிலாறு அணைக்கட்டை ஆக்கிரமிப்பதற்காக கல்லாறு பகுதியில் நடத்தி வந்த மோதலை சிங்கள இராணுவம் கைவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை சமரினால் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் மற்றும் இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் தற்போதும் கைவசம் உள்ள எண்ணெய்க் குதங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

நன்றி>புதினம்.

 

 திருமலைக் கடற்படைத் தளம் மீதான ஆட்லறித் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள சிறிலங்கா அரசு.

 

வடக்கு-கிழக்குப் போரரங்கிற்கான பிரதான போக்குவரத்து மற்றும் விநியோகத் தளமாகவும் திருமலைப் பிரதேசத்திற்கான பாதுகாப்பிற்கான இதய நாடியாகவும் விளங்கிய திருமலைக் கடற்படைத் தளத்தின் மீதான ஆட்டிலறித் தாக்குதல் சிறிலங்காப் படைத்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வடக்கு - கிழக்கில் அமைந்துள்ள கடற்படைத் தளங்களிலேயே மிகப் பெரியதும், திருமலை துறைமுகத்தை அண்டியிருந்ததுமான இத் தளமானது இவ் ஆட்டிலறித் தாக்குதலின் காரணமான இயங்காததன்மையை அடைந்துள்ளதே இதற்கான காரணமாகும்.

இத் தளத்திலிருந்த கடற்படையினர் மற்றும் கடற்கலங்கள் என்பன தற்போது சீனன்குடாத் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சீனன்குடா ஒருவகையில் உயர்பாதுகாப்பு வலையத்தை ஒத்த பிரதேசமாகவே இதுவரை இருந்து வந்தது.

சீனன்குடா விமானத்தளம் விமானப் படையினரின் பாவனையில் தொடர்ந்து இருந்து வருகின்ற போதும், சீனன்குடாத் துறைமுகமானது இதுவரை பிறீமா மா ஆலையின் தேவைகளிற்கே பெரிதும் பாவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடற்படையினர் தற்போது அங்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவர்களின் தொடர் இருப்புத் தொடர்பான கேள்வியே படை உயர் வட்டத்தை ஆட்டங்காண வைத்துள்ளது.

குறிப்பாக, நெடுந்தூரம் சென்று தாக்கும் 120 மில்லிமீற்றர் ஆட்டிலறிகளின் பாவனைக்கு திருமலைத் துறைமுகம் உட்படும் என்ற எண்ணக்கருவே அற்றவர்களாகவே படைத்தரப்பு இருந்துள்ளனர். குறிப்பாக புலிகள் 80 மில்லிமீற்றர் மோட்டார்கள் போன்ற குறுந்தூர ஆயுதங்களின் மூலமே தாக்குதல்களை திருக்கோணமலையில் மேற்கொள்வார்கள் என்றே அவர்கள் கருதியிருந்தனர்.

இந்நிலையில் தளம் மீதான இத் தாக்குதலின் மூலம் கடற்படையினரை தளத்திலிருந்து வெளியேற்றுமளவிற்கான வெற்றியைப் புலிகள் பெற்றுக் கொண்டதோடு, 120 மில்லிமீற்றர் ஆட்டிலறியின் பிரசன்னம் கிழக்கிலும் இருப்பதை முதற்தடவையாக உறுதி செய்துள்ளனர்.

பெரும்பாலும் பார ஊர்திகளின் துணையுடன் நகர்த்தப்படும் இந்தவகையான ஆட்டிலறிகளை திருமலையிலுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்புக்கள் ஏதுமேயில்லை என்றே கருதியிருந்த படை உயர்தரப்பு எவ்வாறு விடுதலைப்புலிகள் இத்தகைய ஆட்டிலறிகளை திருமலைக்கு நகர்த்தினர் என்பதைக் கண்டறிய முடியாமல் தற்போது திணறுகிறது.

-புதினம்-


 போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரம் கண்காணிப்புக் குழுவுக்கு இல்லை - ஒமர்சன
 

 

அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கையெழுத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு அதிகாரம் இல்லை என போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் தொப்பினூர் ஓமர்சன் தெரிவித்தார்.

இதனை சம்மந்தபட்ட தரப்புகளே முடிவுக்கு கொண்டு வரமுடியும் என அவர் குறிப்பிட்டார் . இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கடிதம் தொடர்பில் ஆழமாக கண்காணிப்பு குழு ஆராய்வுகளை மேற்கொள்ள போவதில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகள் மாவிலாறு அணையை மூடி பயங்கரவாதம் ஒன்றை மேற்கொள்வதாக அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் கேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

யுத்த சட்டங்களை மீறி விடுதலைப்புலிகள் மக்கள் தண்ணீர் பெறும் உரிமையை அபகரித்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-பதிவு-

 படையினரின் வலிந்த தாக்குதல்கள் கொழும்பு நகரம் தாக்கப்பட வழிகோலும் - ஹென்றிக்சன.

 

தமிழர் தாயகப் பகுதி மீது சிறீலங்கா படையினர் தொடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள் கொழும்பு நகரம் தாக்கப்படுவதற்கு வழிகோலும் என கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது. நேற்று ரொயிற்றர் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கும் போது உல்வ் கென்றிக்சன் இதனைத் தெரிவித்தார்.

மாவிலாற்றுப் பிரச்சினையை காரணம் காட்டி தரை, வான்வெளிகளில் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள் தவறான அணுமுறை என கண்ணடம் வெளியிட்டுள்ளார்.

இரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் முறித்துக்கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் கண்காணிப்புக் குழுத் தலைவர் தற்பொழுது பெயரளிவில் மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இரு தரப்பினரும் அதிகாரபூர்வமாக விலகாததால் அதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பேச்சை ஆரம்பிக்க முடியும். எனினும் தற்போதைய போர் நிறுத்தத்தில் இருந்து பலதூரத்திற்கு சென்றுவிட்டோம்.

நீரைப் பெறுவதாகக் கொண்டு வலிந்த தாக்குதலைத் தொடுத்துள்ளதன் மூலம் தவறான பாதையில் சிறீலங்கா அரசாங்கம் செல்கிறது. உண்மையில் நீரைப் பெறுவதில் சிறீலங்கா அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்தால் வலிந்த தாக்குதலைத் தொடுப்பது பொருத்தமற்ற செயலாகும்.

சிறீலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெருகல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திப்பை மேற்கொண்டோம். சிறீலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு நாம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் நாம் பேசிக்கொண்டிருந்த போது சிறீலங்கா வான்படை விமானங்கள் எமக்கு அருகில் குண்டுகளை வீசின. இது சரியான அறிகுறி இல்லை என்பதே எனது கருத்து.

என்னைப் பொறுத்த வரை முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கும் வல்லமையை இரு தரப்பினரும் கொண்டிருக்கவில்லை. தற்போதைய வன்முறைகளை மட்டுமே இரு தரப்பினராலும் அதிகரிக்க முடியும். எனினும் நிலமையை சிறீலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறினால் கொழும்பில் தாக்குதல்கள் நடப்பதை தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

பின்லான்ட், டென்மார்க், ஆகிய நாடுகளைப் போன்று கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் முடிவை சுவீடனும் எடுக்கும் பட்சத்தில் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் செயலிழந்து போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

-பதிவு- 

 

'ராஜிவின் தவறான கொள்கையைக் கைகழுவுக'

ஈழத்தமிழர் பிரச்சினையில் புதிய அணுகுமுறை தேவை

 

 

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலைகள் சிங்கள இராணுவத்தினாலும் துரோகப் படைகளாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திரிகோணமலையிலிருந்து தமிழர்களை முழுமையாக விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இவற்றின் விளைவாக 5000த்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் உயிர்தப்பி ஓடிவந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து தப்பி வருவதற்கு வழிஇல்லாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் சகோதரத் தமிழர்களுக்கு சிங்கள வெறியரால் இழைக்கப்படுகின்ற கொடுமைகளை எதிர்த்து தமிழகம் பொங்கி எழுந்தது. கடந்த ஜூன் 16ம் தேதியன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் எங்கும் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. இதைத் தொடர்ந்து தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிடும் படி இந்திய அரசுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.. முதலமைச்சரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதுகுறித்துப் பேசினார். இதன் பின்னர் பிரதமரின் சார்பில் அவரது பிரதம ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழகம் வந்து முதலமைச்சரை வந்து சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அவர் தமிழகம் வரவும் இல்லை, முதலமைச்சரைச் சந்திக்கவும் இல்லை.

அதற்குப் பதிலாக சூலை 3ம் தேதியன்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சியாம் சரண் கொழும்புவுக்குச் சென்று குடியரசுத் தலைவர் இராசபக்சேவைச் சந்தித்துப் பேசினார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப் படுத்துவது குறித்தும் இனப்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது குறித்தும் இருவரும் பேசியதாக அறிவிக்கப் பட்டது.

ஈழத்தமிழர் பிரச்சினையைத் தமிழ் நாட்டு மக்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த பிரச்சினை என்பதை டெல்லியில் இருப்பவர்கள் கொஞ்சமும் உணரவில்லை என்பதையும் அதை உணர்த்தவேண்டிய நிலையில் உள்ள தமிழக முதலமைச்சர் தனது கடமையில் முற்றிலும் தவறிவிட்டார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள கலைஞர் கருணாநிதி அவர்கள் டில்லி ஆளும் கூட்டணியில் முக்கியமான தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமல்ல இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் வயதாலும் அனுபவத்தாலும் மிகவும் மூத்தவர். ஆனால் அதற்குரிய மரியாதையை டில்லி அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

பிரதமரோடு முதலமைச்சர் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து பேசியபிறகு அவரைச் சந்திப்பதற்கு டில்லியில் இருந்து மூத்த அமைச்சர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு அதிகாரியை அனுப்புவதாக டில்லி கூறியது. அந்த அதிகாரியும் இதுவரை வரவில்லை. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சியாம் சரண் கொழும்புவுக்கு அனுப்பப்பட்டபோது அவர் சென்னைக்கு வந்து முதலமைச்சரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் பிறகு கொழும்பு சென்றிருக்க வேண்டும். அவரும் அதைச் செய்யவில்லை. அப்படியானால் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு டில்லி அளிக்கும் மரியாதை இதுதானா? ஈழப்பிரச்சினையை முக்கியமாக பிரச்சினையாக டில்லி கருதவில்லை என்பதும் இதன்மூலம் தெரிகிறது. ஈழப்பிரச்சினையை டில்லி கையாளும் விதத்தில் உள்ள கோளாறு என்பது இப்போது திடீரென்று ஏற்பட்டது அல்ல. பிரதமராக ராசீவ் காந்தி இருந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது.

இந்திராவின் அணுகுமுறை

பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர் கையாண்ட விதம் முற்றிலும் வேறுவகையானது. 1983ம் ஆண்டு சூலை மாதம் கொழும்புவில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மூண்டு 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டபோது தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியா முழுமையுமே கொதித்து எழுந்தது. அப்போது பிரதமர் இந்திரா உறுதியான சில நடவடிக்கைகளை மேற் கொண்டார். அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுடன் அவர் பேசவில்லை. மாறாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ், மத்திய அமைச்சர் அந்தஸ்தில் இருந்த வெளியுறவுத்துறை ஆலோசனைக் குழுத் தலைவர் ஜி. பார்த்த சாரதி ஆகிய இருவரையும் கொழும்புக்கு அனுப்பி ஜெயவர்த்தனாவை எச்சரிக்கச் செய்தார்.

இலங்கை போன்ற சிறு நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் குறித்துப் பேசுவ தற்காக தனது மூத்த சகாக்கள் இருவரை பிரதமர் இந்திரா அனுப்பியது ஏன்? ஈழத் தமிழர் பிரச்சினையை சிறுபிரச்சினையைாக இந்தியா கருதவில்லை அதை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இந்தியா கருதுகிறது என்பதை சிங்கள அரசுக்கும் உலக நாடுகளுக்கும் உணர்த்துவதற்காக தனது மூத்த சகாக்கள் இருவரை அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக கலவரங்களை நிறுத்தாவிடில் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேருமென ஜெயவர்த்தனாவுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக கலவரம் உடனே நின்றது. அதுமட்டுமல்ல கலவரங்களினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக கொழும்பு நகரில் தவித்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பத்திரமாக யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு இந்திய அரசு இரண்டு கப்பல்களை அனுப்பி வைத்தது. அதன் மூலம் அவர்கள் பத்திரமாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்கள்.

பிரதமர் இந்திரா காலத்தில் இலங்கைப் பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்ட அணுகு முறை என்பது கீழ்கண்ட அம்சங்களை முக்கியமானதாகக் கொண்டிருந்தது.

1. இந்தியாவின் செல்வாக்குக் உட்பட்ட ஒருபகுதியே இலங்கை.

2. இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்சினையில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசுகளும், பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா போன்ற இந்திய எதிரி நாடுகளும் தயங்கின.

3. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுகாண ஜெயவர்த்தனா முயலவேண்டுமே தவிர இராணுவ தீர்வுகாண இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

4. இலங்கைக்கு எந்த வெளிநாடாவது இராணுவ ரீதியான உதவி அளிக்க முன்வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும்.

5. திரிகோணமலை மாவட்டத்தி லேயோ இலங்கையின் எந்தப் பகுதியிலோ அந்நிய இராணுவத்தளம் எதுவும் அமைவதை இந்தியா எதிர்க்கும்.

6. கிழக்கு மாநிலத்தில் குறிப்பாக திரிகோணமலை மாவட்டத்தின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாச்சாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. அதாவது இப்பகுதியில் சிங்களரைக் குடியேற்றி தமிழரை சிறுபான்மையினராக்கும் சிங்கள அரசின் முயற்சியை இந்தியா கடுமையாகக் எதிர்த்தது.

7. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடன் சிங்கள அரசு நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால் போராளிகளின் இயக்கங்களைப் பயன்படுத்தி இச்சிக்கலைத் தீர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டது.

பிரதமர் இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக ஈழத்தமிழர் நலன்களுக்கும் இந்திய நலன்களுக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது.

பிரதமர் இந்திரா மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளை ஜெயவர்த்தனா விரும்பவில்லை. ஆனாலும் இந்தியாவுடன் மோதிக்கொள்ளும் துணிவு அவருக்கு ஏற்படவில்லை. எனவே ஜி. பார்த்தசாரதி அவர்களின் முயற்சியின் பேரில் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. தமிழர் பிரதிநிதிகளும் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் உட்கார்ந்து பேசினார்கள். ஓராண்டு காலத்திற்கு மேல் நடைபெற்ற இந்த மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படமுடியவில்லை. இறுதியாக இந்தியா உருவாக்கிய அனெக்சர் சி திட்டம் தமிழர் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதை ஏற்பதற்கு ஜெயவர்த்தனா தயக்கம் காட்டினார். ஆனால் பார்த்தசாரதி அவர்களின் நிர்பந்தத்தின் பிறகு வேண்டா வெறுப்பாக ஜெயவர்த்தனா ஏற்றுக்கொண்டார்.

ராஜீவ் தவறான கொள்கை

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் இந்திரா திடீரென படுகொலைச் செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். ராஜிவ் பொறுப்பேற்றப்பிறகு ஜி. பார்த்தசாரதி முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டார். வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த ரொமேஷ் பண்டாரி ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகராக மாறினார். அவர் ஆலோசனை யின் படியே ராஜீவ் செயல்பட்டார். போதாக்குறைக்கு இலங்கையில் இருந்த இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் தவறான யோசனைகளை ராஜீவுக்குத் தெரிவித்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் ஏற்பட்ட குழப்பங்கள் அத்தனைக்கும் மேற்கண்ட இருஅதிகாரிகளே காரணமாக இருந்தனர்.

ராஜீவ் காந்தியின் காலத்தில் இந்தியாவின் இலங்கைக் கொள்கை என்பது உறுதியற்றதாகவும் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் முற்றிலும் பொறுத்தம் இல்லாததாகவும் அமைந்தது.

ராஜீவ் கொள்கையின் விளைவாக கீழ்கண்ட நான்கு விளைவுகள் ஏற்பட்டன.

அ. ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ஈழத்தமிழர் பிரச்சினைக் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் சிங்கள அரசின் கருத்து எதுவோ அதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஆ. சுயநிர்ணய உரிமை உள்ள தாயகம் பெறுவதற்காக ஈழத்தமிழர்கள் நடத்தியப் போராட்டம் அங்கீகாரமற்றதாகவும், அரசியல் சார்பற்றதாகவும் ஆக்கப்பட்டது. விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என சிங்கள அரசு வர்ணித்தபோது அதை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.

இ. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளை தடுக்க ராஜீவ் அரசினால் முடியவில்லை.

ஈ. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் இஸ்ரேலியச் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை இடமளித்தது. மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மாறும் அபாயகரமான நிலையைத் தடுத்து நிறுத்த முற்றிலுமாக தவறியது. திரிகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையி னருக்கு தேவையான எண்ணெய் கிட்டங்கி கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இந்தியா அந்தப் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு தானும் போ